மாடு முட்டியதில் கண்டமனூரை சேர்ந்தவர் பலி

முருகன் என்பவர்கோயிலில் உள்ள மாட்டு தொழுவத்தில் உள்ள மாட்டை பராமரித்து வந்தார்.;

Update: 2025-03-04 15:12 GMT
ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் 67, கோட்டை கருப்பசாமி கோயிலில் உள்ள மாட்டு தொழுவத்தில் உள்ள மாட்டை பராமரித்து வந்தார்.பிப்ரவரி 25ல் மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்றபோது மாடு முட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மகன் பாலகிருஷ்ணன் புகாரில் கண்டமனூர் எஸ்.ஐ. பாண்டியம்மாள் விசாரித்து வருகிறார்.

Similar News