கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் குருந்தன்கோடு, வெள்ளிசந்தை, நடுவூர்கரை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குளச்சல் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- குருந்தன்கோடு, வெள்ளிசந்தை, நடுவூர்கரை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குளச்சல் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு விரிக்கப்பட்ட படுக்கை விரிப்புகளை தினமும் மாற்றும் வேண்டும் எனவும், வார்டுகளின் தரை மற்றும் சுவர்பகுதியில் கறைகள் இல்லாதவாறு தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.