ஓவர் போதை மயங்கி விழுந்தவர் பலி

பலி;

Update: 2025-03-05 04:17 GMT
சங்கராபுரம் அடுத்த பூட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45; இவருக்கு குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்தவர், வெயிலில் மயங்கி விழுந்து இறந்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரே பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகம் மகனைவி கவுசல்யா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News