குமரி மாவட்டம் கோழிபோர்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ஸ். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர் மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியரின் மகன் அபிஷேக் ஸ்டீபன் (17). இவர் முளகுமூடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். தமிழக முழுவதும் முதல் பிளஸ் டூ தேர்வு நடக்கும் நிலையில், கடந்த 3ஆம் தேதி அபிஷேக ஸ்டீபன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது படிப்பதை நிறுத்திவிட்டு, உடன்படிக்கும் நண்பன் பிரின்ஸ் என்பவரிடம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட உடற்கல்வி ஆசிரியர் மாணவர் அபிஷேக் ஸ்டீபனை தனது அறையில் அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மாணவன் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மாணவனின் தாய் ஈஸ்வரி தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு இதுபோன்று அபிஷேக் ஸ்டீபனை இதே உடற் கல்வியாசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.