ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக;
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (மார்ச் 5) நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் பெருமாள்புரத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். பின்னர் ரத்ததானம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.