ஆயுதப்படையில் காவலர் நல மருத்துவமனை திறப்பு

ஆயுதப்படையில் காவலர் நல மருத்துவமனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா திறந்து வைத்தார்கள். இதன்மூலம் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் காய்ச்சல், தலைவலி போன்ற அனைத்து மருத்துவ காரணங்களை சரிசெய்து கொள்ளும் வகையில் இந்த காவலர் நல மருவத்துவமனையை தொடங்கியுள்ளார்கள்.;

Update: 2025-03-05 15:38 GMT
காவலர்களின் நலன் கருதி பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலர் நல மருத்துவமனையை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆயுதப்படையில் காவலர் நல மருத்துவமனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா திறந்து வைத்தார்கள். இதன்மூலம் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் காய்ச்சல், தலைவலி போன்ற அனைத்து மருத்துவ காரணங்களை சரிசெய்து கொள்ளும் வகையில் இந்த காவலர் நல மருவத்துவமனையை தொடங்கியுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் துணைக்காவல் கண்காணிப்பாளர்ரெத்தினம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

Similar News