மும்மொழிக் கொள்கை வேண்டும் என வரும் மோடியின் அடிமைகளிடம் தமிழ் தெலுங்கு படிக்கச் சொல்லுங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் கண்டன பொதுக்கூட்டத்தில் பேச்சு

மும்மொழி கொள்கை வேண்டும் என கையெழுத்து வாங்க வரும் மோடியின் அடிமைகளிடம் வட இந்தியர்களை மும்மொழி படிக்கச் சொல்லுங்கள் தமிழ் தெலுங்கு படிக்கச் சொல்லுங்கள் அப்புறம் நாங்கள் இந்தியை படிப்பதா வேண்டாமா என முடிவு செய்கிறோம் என கேள்வி கேட்க வேண்டும் என்று பெண்களிடம் அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டார்*;

Update: 2025-03-05 17:55 GMT
அரியலூர், மார்ச்5- அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்பொழுது வருங்கால தலைமுறை படித்தால் தான் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார் நம்ம முதலமைச்சர் ஆனால் மோடி அரசாங்கம் நம்ம எல்லாம் படிக்க கூடாது என முடிவு பண்ணி தான் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என சட்டம் கொண்டு வந்தார் அவ்வாறு இருமொழி கொள்கையில் படித்ததால் இன்றைக்கு பல பேர் கம்ப்யூட்டர் துறையில் உலக அளவில் முன்னேறியுள்ளார்கள் இதற்கு காரணம் இரு மொழிக் கொள்கைதான் இன்று மத்திய அரசு இரு மொழி கொள்கைக்கு பதிலாக புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதற்கான காரணம் இருமொழிக் கொள்கையில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதை தடுத்து வட இந்தியாவில் இருந்து இங்க வந்து வேலை பார்ப்பவர்களை போல நம்ம பிள்ளைகளும் வர வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது தாமரை போட்டுட்டு வீட்டுக்கு வீடு பிஜேபி காரன் வந்து மும்மொழி கொள்கை எங்களுக்கு வேண்டும் என கையெழுத்து வாங்க வருவான் அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறான் இந்தி படித்தால் எங்கே வேலை கிடைக்கிறது இந்தி படித்தவர்கள் எல்லாம் நம்மூரில் ஹோட்டல் மற்றும் விவசாய வேலை செய்து வருகின்றனர் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஹோட்டல்களில் பணியாற்றக்கூடியவர்களாக வட இந்தியர்களே உள்ளனர் ஏனென்றால் அவர்களுக்கு கல்வி கொடுக்கவில்லை எந்த பெரிய வேலைக்கும் போக முடியாததால் இந்த வேலைக்கு வந்துள்ளனர் எல்லோரும் இந்தி படித்தாக வேண்டும் என்றால் நாளைக்கு ஒரு வேலைக்கு போனால் இந்தியில் தேர்வு வைப்பார் அதில் தாய் மொழியாக இந்தியை கொண்டவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்னதான் நாம் இந்தியை படித்தாலும் தாய் மொழியாக இந்தியை கொண்டவர்களுடன் போட்டி போட முடியாது எனவே வேலை வாய்ப்புகள் எல்லாம் வட இந்தியாவுக்கு தான் போகும் இந்த குறுக்கு வழியை கண்டுபிடிப்பதற்கு தான் இந்தியை நம் மீது திணிக்கிறார்கள் நம்மூரில் வங்கி தபால் நிலையம் ரயில் நிலையம் ஆகிய மத்திய அரசு அலுவலகங்களில் வட இந்தியர்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர் நம் வீட்டு வரிப்பணத்தை வாங்கி நமது மாநிலத்தில் நமக்கு வேலை கொடுக்காமல் வட மாநிலத்தவர்களுக்கு வேலை கொடுப்பதுதான் இந்தி திணிப்பதற்கான முதல் படிக்கட்டு. இந்தி படித்தால் வட இந்தியாவிற்கு போகலாம் என கூறுகிறார்கள் நாம் எதற்காக வட இந்தியாவிற்கு போகபோறோம் நமக்கு என்ன அவசியம் உள்ளது என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பினர் இந்தி தெரிந்தால் வட இந்தியாவிற்கு போகலாம் என கையெழுத்து வாங்க வருகிறார்கள் அவர்களிடம் பெண்கள் நீங்கள் தான் தைரியமாக கேள்வி கேட்க வேண்டும் நீங்கள் ஏன் என்கிட்ட வந்து கையெழுத்து வாங்குகிறீர்கள் முதலில் வட இந்தியர்களை முன்மொழி படிக்கச் சொல்லுங்கள் தமிழ் தெலுங்கு படிக்கச் சொல்லுங்கள் அப்புறம் நாங்கள் இந்தியை படிப்பதா வேண்டாமா என முடிவு செய்கிறோம் என மோடிக்கு கொடி பிடித்துக்கொண்டு அடிமை வேலை பார்க்கக்கூடிய பிஜேபி காரர்களிடம் கேள்வி கேட்க வேண்டிய பொறுப்பு பெண்களாகிய உங்களிடத்தில் தான் உள்ளது அந்தப் பணியை முன்னெடுத்து செய்ய வேண்டும் என அம்மாவாய் அக்காவாய் தங்கையா உங்களை கேட்டுக்கொள்கிறேன் என பேசினார் கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News