மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சந்தன குடம் பவனி

கன்னியாகுமரி;

Update: 2025-03-06 03:10 GMT
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் இந்த வருட மாசி கொடை விழா  கடந்த 2 ம் தேதி திருக்கோவில் ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நான்காம் நாளான நேற்று மூன்று ஊர்களில் இருந்து சந்தனக் குடம் பவனி நடந்தது.        நேற்றைய பவனி மேற்குநெய்யூர் வீரமண் கோவிலில் இருந்தும், பட்டுமடை இசக்கியம்மன் கோவிலில் இருந்தும், மாலையில் கொத்தனார் விளை விடாலமுத்து சிவன் கோயிலில் இருந்தும் சந்தனக் குடம் பவனி மண்டைக்காடு கோயில் வந்தடைந்தது.        பின்னர் அம்மனுக்கு சந்தனம் சார்த்தி அலங்கார தீபாரதனை, இரவு அத்தழ பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி ஆகிய நிகழ்ச்சிகள்  நடந்தது. இந்த மூன்று ஊர்களில் இருந்தும் அம்மனுக்கு சாத்தப்படும் சந்தனம் யானை மீது எடுத்து வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக யானைக்கு அனுமதி வழங்கவில்லை.      ஐந்தாம் நாளான இன்று 6-ம் தேதி மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து சந்தனக்கூடம் பவனி ஆலயத்திற்கு வருகிறது.

Similar News