கள்ளக்குறிச்சி, மாடூர் டோல்கேட் அருகில் பஞ்ச முக மஞ்சள் வராஹி அம்மன் கோவில் உள்ளது. இங்கு உலக நன்மைக்காக பஞ்சமி திதி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் மாலை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, விநாயகர், முருகன், நவக்கிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனர். மேலும் ஜல வராஹி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து வழிபாடு நடந்தது.