குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வழக்கம்பாறை பகுதி சேர்ந்தவர் ரங்கசாமி மகன் செல்வகுமார் (26). இவர் ஏசி மெக்கானிக். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த செல்வகுமார் அது முதல் அவர் யாருடனும் சரியாக பேசாமல் இருந்தாராம். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது செல்வகுமார் திடீரென விஷம் குடித்தார். வெளியே சென்றிருந்த ரங்கசாமி வந்து பார்த்து, உடனடியாக நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இது குறித்த புகாரி பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.