மரக்காணம் அருகே கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம்

தீர்த்தவாரி கிராம பகுதியில் நடைபெற்றது;

Update: 2025-03-06 12:11 GMT
தமிழ்நாடு வனத் துறை, திண்டிவனம் வனச்சரகம், புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின.இதில், வனச்சரக அலுவலா் புவனேஷ்வரி மற்றும் வனத் துறையினா் பங்கேற்று, கடல் ஆமைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா். வனவிலங்கு உயிரியல் மூத்த ஆய்வாளா் பூபேஷ் குப்தா கடல் ஆமைகளின் முக்கியத்துவத்துவம், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினாா்.முகாமில் பங்கேற்ற மாணவா்கள், தீா்த்தவாரி கிராமத்தில் உள்ள கடல் ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தின் அருகில் தேங்கிக் கிடந்த நெகிழிக் குப்பைகளை அகற்றினா். தீா்த்தவாரி கிராம மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விழிப்புணா்வைப் பெற்றனா். தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவா் நாகராஜ் வழிகாட்டுதலில் உதவிப் பேராசிரியா் தா.வசந்தராஜா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

Similar News