அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா (பள்ளி ஆண்டு விழா, நூற்றாண்டு விழா
தமிழ்மொழி உலகின் தொன்மையான மொழி, தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் கல்வி கற்று சாதனை படைக்க வேண்டும். பெற்றோரை மதிக்க வேண்டும், பெரியோரை வணங்க வேண்டும். தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.;
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மலையாளப்பட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா (பள்ளி ஆண்டு விழா, நூற்றாண்டு விழா, தமிழ்க் கூடல் விழா) நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் தனக்கொடி தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழ்ச் செம்மல் முனைவர் த. மாயக்கிருட்டிணன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் & பரிசு வழங்கி பாராட்டி சிறப்புரை ஆற்றினார். தமிழ்மொழி உலகின் தொன்மையான மொழி, தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் கல்வி கற்று சாதனை படைக்க வேண்டும். பெற்றோரை மதிக்க வேண்டும், பெரியோரை வணங்க வேண்டும். தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதவி ஆசிரியர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். பழங்குடியினர் நல விளையாட்டுத் துறை அமைப்பின் பொறுப்பாளர்கள், ஊர் முக்கியப் பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் நன்றி கூறினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் விஜயா முன்னிலை வகித்தார். ஆசிரியர் பானுப்பிரியா நிகழ்வினை ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் இராமசாமி, உஷாராணி, அருண்மொழி ஆண்டுவிழா நிகழ்வில் இலக்கிய போட்டிகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் & பரிசுகளும் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.