விவிடோபாட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவிடோபாட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் வளர்ச்சியை முதன்மையான, நோக்கமாக கொண்டு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகமானது, உலகத்தரம்வாய்ந் கல்வியை மாணவர்களுக்கு வழங்கிவருகிறது.;

Update: 2025-03-06 13:51 GMT
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், மற்றும் விவிடோபாட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், மற்றும் சென்னையை தலைமையிடமாக கொண்ட விவிடோபாட்ஸ் நிறுவனத்திற்கும் உள்ள இடையே 06-03-2025 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் தலைமை வகித்தார். அப்பொழுது மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் கூறுகையில் “தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்திற்கும், விவிடோபாட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் வளர்ச்சியை முதன்மையான, நோக்கமாக கொண்டு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகமானது, உலகத்தரம்வாய்ந் கல்வியை மாணவர்களுக்கு வழங்கிவருகிறது. மேலும் இந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்ப உலகத்தில் பல புதுமைகளை படைக்க அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட பல வசதிகளையும், சிறந்த நல்வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு வழங்கிவருகிறது. அந்தவகையில், மாணவர்களின் அறிவு, ஆசிரியர் திறன் வளர்ச்சிக்கு தேவையான பல அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள் நடத்துவதை நோக்கமாகக்கொண்டு இந்தபுரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் நமது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆராய்ச்சி போன்ற பயிற்சிகளுக்கு இந்தநிறுவனம் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஒப்பந்தமானது கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த உதவும். இதன் மூலம் புதிய ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் நிச்சயம் உருவாகும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் நிகழ்ச்சியில் பேசிய விவிடோபாட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் “ வளர்ந்து வரும் தொழில் நுட்ப உலகில் ரோபோவின் பங்கு மிக முக்கியமானது இதன் பயன்பாடு கட்டுமானத்துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் கட்டுமான துறையில் "வைபிரன்ட்க்யூ" போன்ற புதிய கண்டுபிடிப்புகள் கட்டுமானத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் மூலம் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் துறையில் நவீன மாற்றங்களை கொண்டு வர முடியும். இந்த ஒப்பந்தம் தொழில்துறைக்கும், கல்வித் துறைக்கும் இடையே வலுவான பாலமாக அமையும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள், தொழில்துறை சார்ந்த புதிய ஆராய்ச்சி திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.” என்றார் மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்த்தின் கூடுதல் பதிவாளர் முனைவர் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி முனைவர் நந்தகுமார், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் சேகர், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெற்றிவேலன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் முனைவர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News