கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாட்டு இன நாய்களின் கண்காட்சி
கண்காட்சி;
தேனி கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் மார்.18 அன்று தேனி மாவட்டத்தை சேர்ந்த கோம்பை நாய் இனத்தின் மரபியல் வள பாதுகாப்பு மண்டல கருத்தரங்கு நடைபெறவுள்ளது. மேலும் நாட்டு இன நாய்களின் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இதில் வெளிநாட்டு நாய் இனங்கள், உள்நாட்டு பூர்வீக இனங்களான கோம்பை, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை நாய் இனங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது