வீரபாண்டியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தம்பதியர் படுகாயம்
படுகாயம்;
கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது மனைவி மாலதியுடன் நேற்று (மார்.5) வீரபாண்டி அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக பெரோஸ்கான் என்பவர் ஓட்டி வந்த கார் சுரேஷ் பைக் மீது மோதியது. விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் பெரோஸ்கான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை.