போடி அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு
திருட்டு;
போடி அருகே முந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் 2.5 லட்சம் மதிப்புள்ள தனது பைக்கை நேற்று முன்தினம் (மார்.4) நள்ளிரவில் வீட்டின் முன்பாக நிறுத்தியுள்ளார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்த போது நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து குரங்கணி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.