ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்தனர்.;
அரியலூர், மார்ச். 6- ஜெயங்கொண்டம் அருகே செட்டிகுழி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் என்பவரது மகன் ராஜேந்திரன் (50) இவர் அதே பகுதியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் பயந்து போன சிறுமி இது குறித்து பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்தனர் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.