பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் 35 தேர்வு மையங்களில் 79 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,756 மாணவர்கள், 3,776 மாணவிகள் என மொத்தம் 7,532 மாணவ மாணவிகள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் இன்றைய ஆங்கிலத் தேர்வில், 3,713 மாணவர்கள், 3,744 மாணவிகள் என மொத்தம் 7,457 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினார்கள்.;
பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களான குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று (06.03.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் 03.03.2025 அன்று தொடங்கி 25.03.2025 அன்று வரை நடைபெறுகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 35 தேர்வு மையங்களில் 79 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,756 மாணவர்கள், 3,776 மாணவிகள் என மொத்தம் 7,532 மாணவ மாணவிகள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் இன்றைய ஆங்கிலத் தேர்வில், 3,713 மாணவர்கள், 3,744 மாணவிகள் என மொத்தம் 7,457 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினார்கள். 43 மாணவர்கள் மற்றும் 32 மாணவிகள் என 75 மாணவ மாணவிகள் தேர்வெழுத வரவில்லை. இந்நிலையில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், தேர்வுக்கு வருகை தந்துள்ளவர்கள், வராதவர்கள் குறித்த தகவல்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகாம்பாள், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மா.செல்வகுமார், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.