குரும்பலூர் பேரூர் கழகம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலை திறப்பு விழா
தமிழக முதல்வர் ஏற்காமல் அறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் வழியில் போராடி வருகிறார், மேலும் இந்த அண்ணாவின் சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.;
பெரம்பலூர் மாவட்டம்! குரும்பலூர் பேரூர் கழகம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலை திறப்பு விழா! கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. திறந்து வைத்தார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் - எம்.பிரபாகரன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டனர் பெரம்பலூர் மாவட்டம்,குரும்பலூர் பேரூர் கழகம் சார்பில் 1971-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சிலை நிறுவப்பட்டு , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அப்போது திறந்த வைக்கப்பட்டது. அந்த சிலை தற்போது சேதமடைந்திருந்தது. குரும்பலூர் பேரூர் கழக செயலாளர் எம்.வெங்கடேசன் தலைமையில், பழுது பார்க்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை கழக துணைப் பொதுச்செயலாளர் - மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி. திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஆ.இராசா.எம்.பி.பேசுகையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நேரு தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழி அறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் தெரிவித்தார், ஆனால் தற்போது மத்தியில் உள்ள மோடி அரசு இந்தி திணிப்பு மற்றும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற செயலில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் நாம் கொடுக்கும் வரிப்பணத்தை திருப்பித் தரவும் மறுக்கின்றனர், இதனை தற்போது தமிழக முதல்வர் ஏற்காமல் அறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் வழியில் போராடி வருகிறார், மேலும் இந்த அண்ணாவின் சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன்,, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுச்செல்வி ராஜேந்திரன், எஸ்.அண்ணாதுரை, கி.முகுந்தன், அழகு.நீலமேகம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன்,சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் - நகர் மன்ற துணைத் தலைவர் து.ஆதவன்ஸ(எ)ஹரிபாஸ்கர், பேரூர் கழகச் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,ஏ.எம்.ஜாஹிர்உசேன், குரும்பலூர் பேரூர் கழக முன்னாள் செயலாளர் ரமேஷ், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா மற்றும் சுரேஷ், சீரணி பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.