கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

துணை பதிவாளர் பங்கேற்று பயிற்சி வழங்கினார்;

Update: 2025-03-07 03:06 GMT
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் 2024-2025-ம் ஆண்டுக்கான கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் சார்பில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் ஆளுமை திறன் பயிற்சி நடந்தது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் குமார், மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் தஸ்திகீர், மேலாண்மை நிலைய துணை முதல்வர் பாலச்சந்தர், கூட்டுறவு சார்பதிவாளர் கோமதி ஆகியோர் தலைமையில் சங்க பணியாளர்களுக்கு இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மேலாண்மை நிலைய விரிவுரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News