சேலத்தில் நான்கு மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி

காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தது;

Update: 2025-03-07 03:11 GMT
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 40 தீயணைப்பு வீரர்களுக்கு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் நேற்று சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் நடந்தது. இதில், தீயணைப்பு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு பேக் ஸ்டைல், பிரீ ஸ்டைல், மூச்சுப்பயிற்சி, பட்டர் பிளை, டால்பின், மிக வேகமாக நீந்தி செல்வது உள்ளிட்ட பல்வேறு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், தண்ணீரில் சிக்கியவர்களை விரைவாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு மீட்பது குறித்து சேலம் உள்பட 4 மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. நீச்சல் பயிற்சியாளர்கள் மூலம் வீரர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நீச்சல் பயிற்சி 6 நாட்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர். முன்னதாக நடந்த நீச்சல் பயிற்சி முகாமில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு, அருள்மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News