சேலம் சுகவனேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

அதிகாரிகள் விசாரணை;

Update: 2025-03-07 03:12 GMT
சேலத்தில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நேற்று 20-க்கும் மேற்பட்ட மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில் நிர்வாகத்தினர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் மீன்கள் இறப்பிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Similar News