எம் எல் ஏ ஈஸ்வரன் மகளிர் தின வாழ்த்து
எம் எல் ஏ ஈஸ்வரன் மகளிர் தின வாழ்த்து;
அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். பெண்கள் வீட்டையும் கவனித்துக் கொண்டு வெளி உலகில் தொழில், விளையாட்டு, ஆராய்ச்சி, மக்கள் தொண்டு என பல துறைகளில் சாதனைகள் படைத்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு குடும்பம் மிகச் சிறப்பாக ஆரோக்கியமான முறையில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழு காரணம் அந்த குடும்பத்தினுடைய பெண்களையே சாரும். ஒரு குழந்தையை சிறுவயதில் இருந்து பேணி பாதுகாத்து ஆரோக்கியமாக வளர்த்து எதிர்காலத்தில் சாதனைகள் படைத்தவர்களாக மாற்றக்கூடிய சக்தி பெண்களுக்கு மட்டுமே உள்ளது. பெண் திருமணம் ஆன பிறகு வாழ்நாளில் கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும், வயதான பின்பு பேரன், பேத்திகளுக்காகவும் அவர்களது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்கின்றனர். இத்தகைய சிறப்புகள் கொண்ட பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.