திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மனோகல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக இளையோர் பாராளுமன்றம் பதிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பலவேச கிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பதிவு பற்றி செயல்முறை விளக்கம் கூறினர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.