மணக்குடி கிராமவாசிகளின் சுடுகாடு மற்றும் பயிர் செய்த நிலங்களை டால்மியா சிமெண்ட் நிறுவனம் கையகப்படுத்தியிருப்பது சம்பந்தமாக கந்தர்வகோட்டை எம்எல்ஏவிடம் மனு அளிப்பு

அரியலூர் அருகே மணக்குடி கிராமவாசிகளின் சுடுகாடு மற்றும் பயிர் செய்த நிலங்களை டால்மியா சிமெண்ட் நிறுவனம் கையகப்படுத்தியிருப்பது சம்பந்தமாக கந்தர்வகோட்டை எம்எல்ஏவிடம் மனு அளித்தனர்.;

Update: 2025-03-08 03:39 GMT
அரியலூர், மார்ச்.8- அரியலூர் அருகே மணக்குடி கிராமவாசிகளின் சுடுகாடு மற்றும் பயிர் செய்த நிலங்களை டால்மியா சிமெண்ட் நிறுவனம் கையகப்படுத்தியிருப்பது சம்பந்தமாக கந்தர்வகோட்டை எம்எல்ஏவிடம் மனு அளித்தனர்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை எம் எல் ஏ சின்னதுரை  அரியலூருக்கு வருகை தந்தபோது  மணக்குடி கிராமவாசிகளின் சுடுகாடு பிரச்சனை மற்றும் அவர்கள் பயிர்செய்த ஏழரை ஏக்கர் நிலத்தை அடாவடியாக டால்மியா சிமெண்ட் நிறுவனம் கையகபடுத்தி வைத்திருப்பது சம்பந்தமாக மனு ஒன்றை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை இவற்றைப்பற்றி சட்டமன்றத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்தார். உடன் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, மாவட்ட குழு உறுப்பினர் மலர்கொடி, கட்சியின் மூத்த நிர்வாகி சிற்றம்பலம்,  அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் தனலெட்சுமி  உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Similar News