அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது,;
அரியலூர்,மார்ச் 8- அரியலூரிலுள்ள மாவட்ட அதிமுக அலுவலகக் கூட்டரங்கில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கிராமங்கள் தோறும் கிளைகள், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், அமைப்புச் செயலருமான மகேந்திரன், தலைமைக் கழகம் அறிவுறுத்தலின்படி அனைத்து கிளைகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, விளையாட்டு அணிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.வரும் தேர்தலில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து களப் பணியாற்ற வேண்டும் என்று கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள், ராமஜெயலிங்கம், ப.இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆ.இளவரசன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், மாவட்ட அம்மா பேரவை செயலர் ஓ.பி.சங்கர், இணைச் செயலர் பிரேம்குமார், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், கட்சியின் மாவட்டப் பொருளாளர் அன்பழகன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.