பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்

அமைச்சர் ராஜேந்திரன் வேண்டுகோள்;

Update: 2025-03-08 07:35 GMT
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் பந்தல் அமைத்து கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். எனவே பொதுமக்களின் தாகம் தீர்க்க சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியம், பகுதி பேரூர், வட்டக்கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கோடை காலம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவற்றை வழங்க வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Similar News