திமுக அரசை கண்டித்து திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசை கண்டித்து திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருப்பத்தூர் மாவட்டம் திமுக அரசை கண்டித்து திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் மகளிர் தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் திருப்பத்தூர் மேற்கு மாவட்டச் செயலாளர் முனுசாமி தலைமையில் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கெட் அவுட் என்கிற வாசகத்துடன் அடங்கிய பதாகைகள் ஏந்தி திமுக அரசை கண்டித்து தவெக பெண் நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நகர, ஒன்றிய, மாவட்ட, பேரூராட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.