மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவல் அதிகாரிகள் மற்றும் நகராட்சி பெண் தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய நகர் மன்ற தலைவர்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவல் அதிகாரிகள் மற்றும் நகராட்சி பெண் தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய நகர் மன்ற தலைவர்;

Update: 2025-03-08 11:32 GMT
திருச்செங்கோடுநகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன இதில் 17 வார்டுகளில் 50சதவீத பெண் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அந்தப் பெண் கவுன்சிலர்கள் அனைவரும் நகரமன்ற தலைவருடன் இணைந்து உலக மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஜேசிஐ நிர்வாகிகள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினார்கள் இதனை தொடர்ந்து திருச்செங்கோடு நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள நகரமன்ற தலைவர் அறையில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகர் மன்றபெண் உறுப்பினர்கள்அனைவரும் நகராட்சியில் பணியாற்றும் பெண் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் கேக்கை ஊட்டி அனைவருக்கும் ஒருவருக்கொருவர் சத்தமாக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு கொண்டாடினார்கள்.நிகழ்ச்சியில் நகர் மன்றத்தலை வர் நளினிசுரேஷ் பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் சம்பூரணம், திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, மனோன்மணிசர வணமுருகன், செல்விராஜவேல், புவனேஸ்வரிஉலகநாதன்,சண்முகவடிவு,திவ்யாவெங்கடேஸ்வரன், தமிழரசி, புவனேஸ்வரிரமேஷ்,ராதாசேகர்,செல்லம்மாள்தேவராஜன்,தாமரைச்செல்வி மணிகண்டன், ஆகியோருடன்நகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

Similar News