ஆரணி, மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா.

ஆரணி மற்றும் மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி தனியார் மண்டபங்களில் நடைபெற்றதில் ஆரணி எம்.பி கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.;

Update: 2025-03-09 00:47 GMT
ஆரணி மற்றும் மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி தனியார் மண்டபங்களில் நடைபெற்றதில் ஆரணி எம்.பி கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். ஆரணி ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஆரணி- சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 38 கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட், வாலிபால், கால்பந்து, கேரம் போர்டு, சிலம்பு கம்பு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வழங்கினார். இதில் தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியசெயலாளர் சுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒரு கிராமத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் ரூ.50ஆயிரம் மதிப்பு என மொத்தம் 38 கிராமங்களுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் தா. சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார். இதேபோல் மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியம் சார்பில் சைதாப்பேட்டை தனியார் மண்டபத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதில் 37 கிராமங்களுக்கு ரூ.18.5 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றியசெயலாளர்கள் மாமது, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். உடன் முன்னாள் எம்எல்ஏ ஆர் சிவானந்தம், ஆரணி நகர மன்ற தலைவர் ஏசி மணி மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி மாவட்ட பொருளாளர் டி ஏ தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தனன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.டி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருணா குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.குப்புசாமி, என்.ராஜேஸ்வரி, கே.வேணுகோபால், எஸ்.தசரதராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News