நெமிலி அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி;

Update: 2025-03-09 02:04 GMT
நெமிலியை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 70), விவசாயி. இவர்,நேற்று மொபட்டில் சேந்தமங்கலம் நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News