காவேரிப்பாக்கம்:நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி கைது
நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி கைது;
காவேரிப்பாக்கம் அடுத்த சங்கரன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 45). இவரது தம்பி வாசுதேவன் (42), விவசாயிகளான இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கோதண்டராமன் நேற்று வீட்டில் இருந்தபோது அங்கு வந்த வாசுதேவன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வாசுதேவன் அங்கிருந்த இரும்பு ராடால் அண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதிமக்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கோதண்டராமன் அவளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.