பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி

தமிழக வெற்றிக்கழக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-09 03:55 GMT
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மத்திய மாவட்ட பொறுப்பாளர் காவியா, மாநகர பொறுப்பாளர் சுந்தரவள்ளி ஆகியோர் தலைமையில் பெண்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, தொட்டில் முதல் சுடுகாடு வரைக்கும் பாலின வன்கொடுமைகள் நடந்து வருகிறது. எனவே, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு கருணை காட்டாமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு சலுகைகள் ஏதும் வேண்டாம். பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் போதும், என்றனர்.

Similar News