சேலம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது20). இவர் ஒரு பெண்ணை வேலைக்கு செல்லும்போது வழிமறித்து கேலி கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.