திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நேற்று வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அழகியநம்பி (44) என்பவர் மோட்டார்சைக்கிளில் யானை தந்தங்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.அவர் தனது கூட்டாளி நான்கு பேர் உதவியுடன் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள யானையின் பற்கள், யானை தந்தங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் 5 பேரையும் கைது செய்தனர்