கட்டட தொழிலாளர் சங்க அலுவலக கட்டடம் திறப்பு

திறப்பு;

Update: 2025-03-09 19:56 GMT
கள்ளக்குறிச்சி, விளாந்தாங்கல் சாலையில், கட்டட தொழிலாளர் சங்க அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். நகர்மன்ற சேர்மன் சுப்ராயலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் வேலு, அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.தொடர்ந்து கட்டட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, செந்தில் ஆகியோர் சொந்த நிதியில் அலுவலக கட்டடத்தை கட்டி கொடுத்த நகர்மன்ற சேர்மன் சுப்ராயலுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News