பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

முகாம்;

Update: 2025-03-09 20:18 GMT
கள்ளக்குறிச்சியில் நடந்த ரேஷன் கார்டு குறித்த குறைகேட்பு முகாமில் 32 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, குடிமைப் பொருள் தனி தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார்.முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் 4, திருத்தம் 6, பெயர் நீக்குதல் 2, முகவரி திருத்தம் 6, மொபைல் எண் மாற்றம் 12, பிறந்த தேதி திருத்தம் 1, புகைப்படம் மாற்றம் 1 என என தலா 32 மனுக்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது.

Similar News