கன்னியாகுமரி அருகே இலட்சுமிபுரத்தில் வள்ளுவர் மகளிர் இயக்கம். மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 3-வது சர்வதேச மகளிர் தின விழா பாரதமாதா நூலக திடலில் நடந்தது. காலையில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நண்பகல் மாபெரும் சமுத்துவ விருந்து நடந்தது இவ்விழாவில் அஞ்சுகிராமம் பேரூராட்சி துய்மை பணியாளர்களை கெளரவித்து, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற மகளிர் விழாவிற்கு வள்ளுவர் மகளிர் இயக்க கௌரவ தலைவர் வசந்தாள் ஆதித்தன். பொருளாளர் இந்திரா பிரகலாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் அழகம்மாள் முத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்க மாவட்ட செயலாளர் சமூகசேவகி ஜெயா ஶ்ரீதரன், லீபுரம் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் தங்கம் கணேசன், அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் கலந்துகொண்டனர். .