வழக்குப் பதிவு

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வட மாநில வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு;

Update: 2025-03-10 03:20 GMT
பீகார் மாநிலம் மதிப்பூரா, கிங்கேஸ்வரர் பகுதியை சேர்ந்தவர் சந்திர கிஷோர் குமார் (22). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கிரானைட் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதே கம்பெனியில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதே கம்பெனியில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களது 16 வயது மகளிடம் சந்திர கிஷோர் குமார் கடந்த ஒரு மாதமாக ஆசை வார்த்தை நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சந்திர கிஷோர் குமார் சிறுமியிடம் நைசாக பேசி அவரை தனியாக அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் நடந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சந்திர கிஷோர் குமார் சிறுமியை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சந்திர கிஷோர் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News