தீ விபத்து

சென்னிமலை பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் சென்னிமலை மற்றும் மொடக்குறிச்சி பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.;

Update: 2025-03-10 03:45 GMT
சென்னிமலை அருக அக்கரையாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னந்தோப்புக்குள் காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ஸ்பிரேயர் மற்றும் இலை, தழைகளை கொண்டும் தீயை முற்றிலுமாக அணைத்தனர். அந்த சமயத்தில் சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதியில் போலீசார் குடியிருப்பு உள்ளது. இதன் பின்புற பகுதியில் காய்ந்து கிடக்கும் செடி, கொடிகளிலும் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பின்னர் இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சென்னிமலை அருகே அக்கரையாம்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் காய்ந்த செடி, கொடிகளில் தீ பிடித்ததால் சென்னிமலை தீயணைப்பு வாகனம் அங்கு தீயை அணைக்க சென்று விட்டது.அதனால் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சென்னிமலைக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். யாரோ பீடி, சிகரெட் பற்ற வைத்தவர்கள் தீயை அணைக்காமல் வீசி விட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.இதே போல் நேற்று மாலை சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோட்டில் புஞ்சை பாலதொழுவு பகுதியில் பாய்ந்து கிடந்த செடி கொடியில் ஏற்பட்ட தீயை சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அடைத்தனர். ஒரே நாளில் சென்னிமலை பகுதியில் 3 இடங்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அனைத்தனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில் பீடி, சிகரெட் பற்ற வைப்பவர்கள் மற்றும் வேறு ஏதாவது தேவைக்கு தீ வைப்பவர்கள் செடி, கொடிகள் வறண்டு கிடக்கும் இடங்களை தீ பற்ற வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றனர்.

Similar News