சேலம் தளவாய்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலில் இருந்த 1 அடி உயரமுள்ள பஞ்சலோக விநாயகர் சிலை திருட்டு போனது. இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் கோகிலா இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலையை திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.