திருப்பத்தூரில் கலக்ட்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நகராட்சி நிர்வாகம்

திருப்பத்தூரில் கலக்ட்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நகராட்சி நிர்வாகம்;

Update: 2025-03-10 04:33 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தூசியாக பறந்து கரைந்து கொண்டிருக்கும் 40 லட்சம். திட்டமிடப்பட்ட சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் உத்தரவை காற்றில் பறக்க விட்ட நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் பாரதி நகர் பாரதிதாசன் நகர் உள்ளிட்ட 15-வது வார்டு பகுதி வழியாக அச்சமங்கலம் ஊராட்சி பாச்சல் ஊராட்சி என பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30,000 பேர் பயன்படுத்தக்கூடிய முக்கிய சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்த நிலையில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் இந்த சாலையை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து 70% பணி நிறைவடைந்த நிலையில் அந்த சாலை பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் அந்த வழியாக பள்ளி வாகனங்கள் கனரக வாகனங்கள் செல்லும்போது அடர்ந்து தூசிகள் பறப்பதால் பின்னால் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுவது மட்டுமின்றி கண்களில் தூசி விழும் பொழுது விபத்து ஏற்படக்கூடிய அபாயமும் இருந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இறுதியாக மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லியிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த சாலைப் பணிகள் குறித்து துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆணையர் சாந்திக்கு பரிந்துரைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி அலட்சியமாக இருக்கும் நகராட்சி ஆணையர் சாந்தி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இதே நிலை நீடித்தால் 70% நிறைவடைந்த அந்த சாலை பணியின் தரம் குறைந்து மீண்டும் சாலை குண்டும் குழியுமாக மாறக்கூடிய அவல நிலை ஏற்படும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Similar News