அரக்கோணம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது!
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர்;
அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டை பகுதியை சேர்ந் தவர் கணேசன் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித் துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இச்சம்பவம் குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிக்கு கணேசன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து கணேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.