மழையூர் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!;

Update: 2025-03-10 06:07 GMT
கலவையை அடுத்த மழையூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதற்காலயாக பூஜையில் கோ பூஜை, புண்யாவாசனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை, கும்பபிரதிஷ்டை, இரண்டாம் காலையாக பூஜையில், மகா சாந்தி ஹோமம், திருமஞ்சனம், மூன்றாம் கால பூஜையில் மகா பூர்ணாஹூதி, யாத்ராதனம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் புனித நீர் கலசத்தை தலையில் சுமந்தபடி மங்கள இசையுடன் கோவிலை வலம் வந்து கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. கோவில் கருவறை யில் அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மனுக்கு மகா கற்பூர தீபா ரதனை காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News