குமரி கடற்கரை பகுதிகளில் பேரலை எச்சரிக்கை

நாகர்கோவில்;

Update: 2025-03-10 07:24 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 11 ஆம் தேதி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.       இது குறித்து இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-  குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கடல் பகுதியில் 14 முதல் 18 வினாடிகளுக்கு ஒருமுறை 1முதல் 1.3 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த பேரலை நாளை மார்ச் 11 ஆம் தேதி வரை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.        இது கள்ளக்கடல் எச்சரிக்கை என்பதால் மீனவர்கள், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கடல் பகுதிகளுக்கு செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News