மகளிர் தினம்

ஈரோட்டில் தனியார் உணவகத்தில் நூதன முறையில் மகளிர் தின கொண்டாட்டம்;

Update: 2025-03-10 07:30 GMT
உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே போல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ( ஹோட்டல் வேதாஸ் ) மகளிர் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முறையில் ஒரு போட்டியை நடத்தினர் . அதாவது தங்கள் உணவகத்திற்கு மாமியார் - மருமகள் ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட வர வேண்டும் , மாமியாருக்கு பிடித்த உணவை மருமகளும் , மருமகளுக்கு பிடித்த உணவை மாமியாரும் ஆர்டர் செய்ய வேண்டும் எனவும் , தாங்கள் ஆர்டர் செய்த உணவுகளை தங்கள் கையாலே மற்றவர்களுக்கு ஊட்டி விட வேண்டும் என்பதும் , உணவை மிச்சம் வைக்க கூடாது என்பன போட்டியின் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டது. நிபந்தனையின் படி உணவை மிச்சம் வைக்காமல் தங்கள் கைகளால் ஊட்டிவிட்ட உணவுகளுக்கு பில் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து போட்டியில் கலந்து கொள்ள வந்த மாமியார் மருமகள்கள் சைவ , அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து உணவை மிச்சம் வைக்காமல் தங்களது கையால் ஊட்டி மகிழ்ந்தனர். வீடுகளில் சிறு சிறு மனஸ்தாபங்கள் கூட மாமியார் மருமகள் இடையே பெரிய பிரச்சினை உண்டாக்கி விடுவதாகவும் , இருவரும் தங்களது கைகளால் ஊட்டி விடும்போது தங்களிடையேயான கோபம் குறைந்து அன்பு வெளிப்படுவதாகவும் போட்டி ஏற்பாட்டாளர்களும் , மாமியார் இன்னொரு தாய் என்றும் மருமகள் இன்னொரு மகள் எனஉணர்வதாகவும் போட்டியில் கலந்து கொண்டவர்களும் தெரிவித்தனர்.

Similar News