அரசு பள்ளி வளாகத்தில் மரங்களுக்கு பெயர் பலகை வைப்பு

பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு அவற்றின் பெயர்கள் அடங்கிய பலகை அமைக்கும் பணி, நடந்தது;

Update: 2025-03-10 10:16 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுக்காக்க, மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் புங்கன், மா, வேம்பு, அத்தி, ஆலமரம் உள்ளிட்ட 10 வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மரங்களின் தாவரவியல் பெயர்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு மரங்களிலும் பெயர் பலகை வைக்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு அவற்றின் பெயர்கள் அடங்கிய பலகை அமைக்கும் பணி, பள்ளி தலைமையாசிரியர் விமலா முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது, மரங்களின் பெயர்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறினர்.

Similar News