கச்சிராயபாளையம் அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் மகன் மணிவண்ணன், 29; இவர் கடந்த 9 ம் தேதி இரவு 12:00 மணி அளவில் மாத்தூர் கிராமத்தில், தனது அக்கா மகள் திருமண பெண் அழைப்பு நிகழ்ச்சியில் உறவினர்களுடன் கலந்து கொண்டார்.பெண் அழைப்பு ஊர்வலம், மாரியம்மன் கோவில் அருகே சென்றது. அப்போது, அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஸ்டாலின்; ராமலிங்கம் மகன் உதயசூரியன்; நல்லதம்பி மகன் சின்னதுரை; ஆகியோர் மேளம் அடிக்கக்கூறி ஊர்வலத்தில் தகராறு செய்தனர். இதை தட்டி கேட்ட மணி வண்ணன் மற்றும் அவரது உறவினர் திருப்பதியை அரிவாளால் வெட்டினர். இது குறித்த புகாரில்,3 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஸ்டாலினை கைது செய்த நிலையில், தப்பிய உதயசூரியன், சின்னதுரையை தேடி வருகின்றனர்.