சேலம் உடையாப்பட்டியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

செயற்பொறியாளர் தகவல்;

Update: 2025-03-11 03:30 GMT
சேலம் உடையாப்பட்டி காமராஜர் நகர் காலனியில் உள்ள கிழக்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடைய வேண்டும் என்று கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

Similar News