சேலத்தில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் சிக்கினார்
போலீசார் நடவடிக்கை;
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 66). நேற்று முன்தினம் இவர் வீட்டில் தூங்கிய போது திடீரென சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தார். அப்போது மர்மநபர் ஒருவர், பெரியசாமியின் வீட்டுக்கதவை ஜன்னல் வழியாக திறக்க முயற்சி செய்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியசாமி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த நபர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை ராஜபட்டினம் தெற்கு பகுதியைச் சேர்ந்த சின்னராஜா (37) என்பவரை கைது செய்தனர்.